இலஞ்சம் பெறும் பொலிஸார் - பொதுமக்கள் விசனம் (Video)
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் பல்வேறு போதைபொருள்களை கடத்தி விற்பனை செய்து வரும் நபர் ஒருவரால் கிராம மக்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் என பலருக்கும் இடையூறு விளைவிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்தும் குறித்த நபரை இதுவரையில் கைது செய்யவில்லை பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நேற்றுமுன்தினம் (28) இரவு குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற குறித்த போதைபொருள் கடத்தல்காரர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளதுடன் நேற்று காலை (29) பெண் ஒருவரையும் தாக்கியுள்ளார் எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபரிடம் வேறு முறைப்பாடு தொடர்பாக விசாரணைக்காக வந்த மருதங்கேணி பொலிஸார் இருவர், குறித்த நபரிடம் இருந்து லஞ்ச பணம் வாங்குவதை சிறுமி ஒருவர் அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இச் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,



