பொலிஸார் மண்ணகழ்வை கண்டுகொள்வதில்லை
சாராய கடத்தல்களைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் பொலிஸார் இரணைமடுவில் கனரக வாகனங்களில் மண்ணகழ்வதை கண்டுகொள்வதில்லை என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மிக முக்கியமான குளமாகவும், விவசாய குளமாகவும் காணப்படும் இரணைமடு குளத்தில் அதிகளவான மண்ணகழ்வு இடம்பெற்று வருகின்றது.
குறித்த மண்ணகழ்வினை தடுப்பதற்கு பொலிஸார் முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. கனரக வாகனங்களைக் கொண்டு பல கியூப் மணல் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றிச் செல்லப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இரணைமடு குளம் முழுமையாக அழிவடைந்துவிடும். இந்த மண்ணகழ்வினை கட்டுப்படுத்தாமையானது குளத்தினை அழிப்பதற்கான திட்டமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.
சாதாரணமாகச் சாராயம் கடத்தப்படுவது தொடர்பில் பொலிஸார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துகின்றனர்.
ஆனால் இவ்வாறு பாரிய மண் கொள்ளை
இடம்பெறும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த தவறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி, இராணுவத்தினர் ஊடாக முழுமையாகக்
கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri