இவரை தெரியுமா..! பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்
குருநாகல் - மீகஹகொட்டுவ அரச பெண்கள் காப்பகத்தில் இருந்து சிறுமியொருவர் தப்பிச்சென்றதாக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
காணாமல்போன சிறுமியின் விபரங்கள்
அதன்படி, 14.07.2025 அன்று, சிலாபம் பொலிஸ் நிலையத்தால் சிறுமி பாதுகாப்பற்ற நிலையில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், அதே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
17.07.2025 அன்று சிறுமி மீண்டும் அதே குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

காணாமல்போன சிறுமியின் விபரங்கள்
பெயர் - வில்லாப் பிரான்சிஸ்கோ மயூமி பிரதாரா
வயது - 15 வயது
முகவரி - எண். 06 ஹெனகெதர, உடுபத்தாவ
சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
தொலைபேசி எண்கள்
1. OIC குளியாபிட்டிய - 071-8591263
2 குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையம் - 037-2281222