ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் காலத்தில், வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிட அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் சில பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வேட்பாளரும் பங்கேற்கும் கூட்டங்கள் குறித்து உரிய நேரத்தில் அறிவித்து, அந்தக் கூட்டங்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
இதேவேளை ஒவ்வொரு வேட்பாளருக்கும் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் மதிப்பீடு செய்யப்படுகிறது.''என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
