யாழில் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தப்பியோட்டம்: பொலிஸார் வழங்கிய உறுதி
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவரை மூன்று நாட்களுக்குள் கைது செய்வதாகவும், தமக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏழாலையில் கடந்த 4ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களில் சிலர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் நேற்றைய தினம் விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், பொலிஸாரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விடயத்தை கூறியுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24