திருமண வீட்டில் அடிதடி மோதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள்
வரக்காபொல பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி தொடர்பில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரக்காபொல பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடிதடியின் போது பொலிஸ் குழுக்கள் இரண்டும் சிவில் உடையில் இருந்தமையினால் இரண்டு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் காயமடைந்தததாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களான பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் மற்றும் மாரவில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்கான சென்றுள்ளனர்.
இரவில் ஜீப் வண்டியில் சென்று கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றுமொரு வாகனத்தில் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீண்ட தூரம் சென்றமையினால் அது அடிதடி மோதலாக மாறியுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்ற வாகனத்தில் கம்பஹா பொலிஸ் தலைமையக ஊழல் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் குழுவினராகும்.
இந்த மோதல் தொடர்பில் வரக்காபொல பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரை கைது செய்துள்ளனர்.