கோமரங்கடவல பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேருக்கு தொற்று உறுதி
திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை ஏற்கனவே கோமரங்கடவல பிரதேசத்தில் 27 பேருக்கு தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையமாக திறக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
