பொலிஸாரின் ஊழல்களே விபத்துக்களுக்கு காரணம்: சபா குகதாஸ் காட்டம்
பொலிஸாரின் இலஞ்ச ஊழல்களே குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களுக்கு காரணம் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
குற்றஞ்சாட்டி உள்ளார்.
நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கின்ற அதேநேரம், வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் அப்பாவிகளின் உயிர்கள் காவு கொள்ளப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் செயற்பாடுகள்
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் இதுவரை கண்டறியவில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை.
அத்துடன், ஆட்சித் தரப்பில் உள்ள ஊழல் மோசடிகள் மறைக்கப்படுவதற்காக இரண்டாம் மட்ட இலஞ்ச ஊழல்கள் தடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முறையற்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுதல் மற்றும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களை செய்தவர்களிடம் இலஞ்சம் வாங்கி அவர்களை விடுவித்தல் போன்ற பொலிஸாரின் செயற்பாடுகளினாலேயே நாளாந்தம் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
ஆகவே, நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பொலிஸாரின் இலஞ்ச ஊழல் மோசடிகளே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
