யாழில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைது
யாழ். இளவாலை பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரச்சினை ஒன்றிலிருந்து, சுழிபுரத்தை சேர்ந்த ஒருவரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெறுவதற்கு சென்றுள்ளதாக சுழிபரத்தை சேர்ந்த நபரொருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கிவிட்டு அவர்களது ஆலோசனையின் கீழ் செயற்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் பெற முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri