மதுபோதையில் வாகனமோட்டிய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்
குடிபோதையில் வாகனமோட்டிய மட்டக்களப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரி கைது
மதுபோதையில் வாகனம் ஓட்டிய நிலையில் கடந்த 16ஆம் திகதி அம்பாறை காவன்திஸ்ஸ வித்தியாலயத்தின் அருகே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
அம்பாறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் தொடக்கம் அவரது சேவையை இடைநிறுத்தி மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே எதிர்வரும் 23ம் திகதி குறித்த பொலிஸ் அதிகாரியை அம்பாறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
