கட்டுநாயக்கவில் பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு
கட்டுநாயக்கவில் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, அதனைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கட்டுநாயக்கவில் உள்ள தாவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறி்த்த சம்பவம் சற்றுமுன் (15.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தப்பிச்சென்ற சந்தேகநபர்
மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அதே வாகனத்தில் தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது.

"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri