பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி செய்தி
இலங்கை பொலிஸ் திணைக்களம், போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த கொடுப்பனவு தொகை 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் (களப்பணியிலும் அலுவலக பணியிலும் உள்ளவர்கள்), பொலிஸ் சர்ஜென்ட்கள், கான்ஸ்டபிள்கள், களப்பணியில் ஈடுபடும் கான்ஸ்டபிள் சாரதிகள் ஆகியோருக்கு இவ்வாறு கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.
ஊக்கத் தொகையை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம், போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
