வேட்டையாடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த சிக்கல்
திருகோணமலை - இஸ்ஸனெவ வனப் பகுதியில் இரவு நேரத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மேலும் இருவர் நேற்றிரவு (16.08.2023) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்குரிய T -56 துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மொரவெவ பொலிஸின் கீழ் உள்ள ரொட்டவெவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஏனைய இரு சந்தேகநபர்களும் வஹல்கட பிரதேசத்தில் வசிப்பவர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.
உறங்கிய பொலிஸ் அதிகாரி
இந்நிலையில் கைதுர் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், இஸ்ஸனெவ பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை காவல் காத்துக் கொண்டிருந்த ஏனைய இரு சந்தேக நபர்களை சந்தித்து, மிருகங்களை வேட்டையாடுவதற்காக தனது கடமை ஆயுதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, காவல் குடிசையில் உறங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
