மணல் அகழ்வுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார்! (pHOTOS)
மன்னார் நீதிமன்றத்தால் மணல் அகழ்வுக்கு எதிராக வழங்கப்பட்ட கட்டளையை பொலிஸார் நடைமுறைப்படுத்தவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தால் முறையற்ற அனுமதியின்றி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்று வந்த மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு கடந்த இரண்டாம் திகதி (02-06-2022) கட்டளையிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார்
இந்நிலையில், இதுவரை குறித்த கட்டளை இலுப்பைக்கடவை பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வழக்கு தொடர்ந்த ஆத்திமோட்டை சிவில் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் சட்டவிரோதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையாகிய நீதிமன்றத்தையும் நம்பிக்கை இழக்க
வைக்கும் செயலில் பொலிஸார் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.



