முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் : பொலிஸ் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல் (Photos)
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலானது நேற்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குமிடையில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில், பிரதேச மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரதேசத்தில் இடம்பெறும் அண்மைக்கால பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள், சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத காடழிப்பு மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது வெளி கடற்கரையோர பிரதேசங்களில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு கஞ்சா, ஹெரோயின் போன்றன கடத்தப்படுவதால் இளைய தலைமுறை போதைப்பொருள்களுக்கு அடிமையாக மாறும் சூழல் நிலவுவதுடன் பாடசாலை மாணவர்களும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாக மாறும் அவல நிலை ஏற்படும் என்றும் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் ஏற்கனவே பொலிஸ் இராணுவம் இணைந்த தடுப்பு சோதனை காவலரண் ஒன்று நட்டாங்கண்டல் பகுதியில் இருக்கின்றது என்றும், அதனை விடவும் மேலதிகமாக 3 பொலிஸ் இராணுவம் இணைந்த காவலரனை அமைத்து பிரதேசத்தில் இடம்பெறும் குற்றங்களை தடுத்து நிறுத்த ஆவண செய்யுமாறும் பிரதேச சபை உறுப்பினர்களால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
