அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களினால் விமர்சிக்கப்பட்ட அமைச்சர் சரத் வீரசேகர
அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அமைச்சர் சரத் வீரசேகரவை (Sarath Weerasekara) மூன்று அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனதாக தெரியவருகிறது.
பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலேயே இவ்வாறு கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), மஹிந்தானந்த அலுத்கமகே (Mahindananda Aluthgamage) மற்றும் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) ஆகியோர் இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
தாம் செய்த முறைப்பாடு ஒன்று இதுவரையில் விசாரணை செய்யப்படவில்லை எனவும், முறைப்பாட்டை பதிவு செய்த மற்றும் விசாரணை நடத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சராக தமது முறைப்பாடே இவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டால் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வாறான நிலை ஏற்படும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சி காலத்தில் மோசடிகளில் ஈடுபட்ட 20 பேர் பற்றிய விபரங்கள் அடங்கிய முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 24 மணித்தியாலங்களில் பொலிஸார் முறைப்பாடுகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தனர் எனவும், தற்பொழுது அந்த செயற்திறனை காண முடியவில்லை எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் சரத் வீரசேகர உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என பதிலளித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri