கைது செய்யப்படுபவர்கள் தொடர்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை
இலங்கை பொலிஸாரால் AMIS (arrested monitoring investigation system) கைது செய்யப்படுபவர்களை புலனாய்வு விசாரணை செய்யும் புதிய அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஹுட்லர் தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய நடவடிக்கை தொடர்பில் மேலும் விளக்கப்படுத்திய அவர்,
இலங்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அதாவது எமது நாட்டில் உள்ள 25 நிர்வாக பிரிவிலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் சில நிமிடங்களில் அந்நபர் தொடர்பான தவல்களை குற்றங்களுக்கான தகவலை இதனூடாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் தொடர்பான தகவல்கள்
குற்றங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன. அதில் ஒரு செயற்றிட்டமாக AMIS அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்படும் ஒரு நபர் தொடர்பில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி AMIS தொடர்பு கொண்ட இரண்டு நிமிடத்தில் அவர் தொடர்பான தகவல்கள் அதாவது IRC (islandwide recanwet crimina)l நாடு முழுவதும் தேடப்படும் குற்றவாளி அல்லது பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரா? என்ற விடயம் அம்பலமாகும்.
மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியா என்ற தகவல்கள் கிடைத்து விடும். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 நிமிடங்கள் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
