பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - பொலிஸ் சாரதி கைது
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(24.08.2026) இரவு இடம்பெற்றதையடுத்து பொலிஸ் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டி சம்பவ தினமான நேற்று இரவு சிறைச்சாலை நோக்கி பிரயாணித்து கொண்ட போது சிறைச்சாலை சந்தியில் கோவிங்டன் வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்தவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸ் வண்டியை செலுத்தி சென்ற பொலிஸ் சாரதியை கைது செய்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.