தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் உயிரை பறித்த பொலிஸ் வாகனம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன மாறுதலைக் கடந்து செல்லும் தொடங்கொட என்ற இடத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவரை ஏற்றிச் சென்ற வாகனம், மற்றொரு மோட்டார் வாகனத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கிழக்கு மாகாண அரச புலனாய்வு சேவையின் துணை பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, மோதுண்ட மற்றைய வாகனத்தின் ஓட்டுநர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு
பொலிஸ் ஓட்டுநர், ஏஎஸ்பி மற்றும் மற்றொரு மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவர் உட்பட காயமடைந்தவர்கள் நாகொடவில் உள்ள களுத்துறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸ் அதிகாரி, எச்.எம்.சி. நிலங்க ஹேரத் உத்தியோகபூர்வ பணிக்காக கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் அருகில் நின்றிருந்த அதன் ஓட்டுநரே உயிரிழந்தார்.