முல்லைத்தீவில் யுவதி ஒருவர் எடுத்த தவறான முடிவு!
முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த யுவதி ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று நண்பகல் (20) இடம்பெற்றுள்ளது .
27 அகவையுடைய துரை றொபின்சா என்ற யுவதியே இவ்வாறு தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லீசிங் நிறுவனத்தில் பணியாற்றிவந்த குறித்த யுவதி தனக்கு வாழபிடிக்கவில்லை என மன விரக்தியில் கடிதம் ஒன்றினை எழுதி உடமையில் வைத்துவிட்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam