இலங்கையில் தேடப்படும் தமிழர் யார்....! பின்னணி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் தேடப்படும் நபர் ஒருவர் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் கூலித்தொழிலாளியாக செயற்படும் 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரே குற்ற புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார்.
அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகளான இலங்கையை சேர்ந்த நால்வர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய குறித்த சந்தேக நபரை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி
இந்தநிலையில் கடந்த 23ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 34 வயதுடைய நபரொருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவருடன் அக்குழுவினர் இந்தியா செல்வதற்கு முந்தைய நாள் அவர் தொலைபேசியில் பேசியதும், நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மீண்டும் ஆஜராகுமாறு குறித்த நபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நான்கு பேருக்கும் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மேலும், தற்போது குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் நாட்டினுள் இருக்கின்றார்களா என உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri