பொலிஸாரின் விசேட சோதனை: ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்கள்
அக்குறனை துனுவில பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது பல ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது நேற்றையதினம்(24.06.2023) முன்னெடுக்கப்பட்டதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அனுமதி
மேலும், டி-56 துப்பாக்கி தோட்டாக்கள் 11, அலைபேசிகள் 29, 2 இராணுவ உடைகள் , 2070 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் , 7 தடைச்செய்யப்பட்ட கத்திகள் மற்றும் 17,040 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேக நபருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் என்றும் தீகல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கைதொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் போதைப் பொருள் விநியோகிக்கும் நபர் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய பொலிஸாரால் ,மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |