எம்.வீ எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலின் மாலுமியிடம் பொலிஸார் விசாரணை
அண்மையில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பலின் மாலுமி மற்றும் பணியாளர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்த உள்ளனர்.
இந்த விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் மாலுமி மற்றும் பணியாளர்களிடம் நாளைய தினம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
கடல் பாதுகாப்பு அதிகாரசபையினால் இயற்கை வளம் சேதமாக்கப்பட்டமை குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 23ம் திகதி கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடாத்திய பொலிஸார் அறிக்கை ஒன்றை நீதவானிடம் ஒப்படைத்துள்ளனர்.
எனினும், மாலுமி உள்ளிட்ட பணியாளர்களிடம் விசாரணை இதுவரையில் நடாத்தப்படவில்லை. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதனால் இவ்வாறு விசாரணைகள் நடாத்தப்படவில்லை.
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri