தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான நீண்ட விடுமுறைக் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹான இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் ஒன்று கூடுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்து சமூக தூரத்தைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் காவல்துறையின் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தனிமைச் சட்டங்களை மீறியதற்காகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 3200 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri