பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ இடமாற்றம்!
பொலிஸ் போதைமருந்துத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ, திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 05 பொலிஸ் நடவடிக்கைப் பிரிவின் தலைமையகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ரங்கஜீவ, தற்போது நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு பதிவு
அத்துடன், அவர் இதுநாள் வரையும் பயன்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக தற்போதைக்கு அவர் தன் சொந்த வசிப்பிடமான கடுவெல, கொரதோட்டை பிரதேசத்தில் இருந்து தினமும் நுகேகொடைக்கு வந்து செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், தான் வசிக்கும் பிரதேசம் போதை மருந்து வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக்கும்பல்களின் செல்வாக்குள்ள பிரதேசம் என்பதால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ரங்கஜீவ, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதுமாத்திரமன்றி, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தனக்கு எதிராக பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 18 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.