சிறுமி விவகாரம்! - பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
பாலியல் தேவைக்காக 15 வயதான சிறுமி ஒருவர் இணைத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 32 பேர் கைது செய்யப்பட்டு தடுத்த வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 22 பேர் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரும், பெளாத்த துறவி ஒருவரும், இரத்தின கல் வியாபாரி மற்றும் கப்பல் கெப்டன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான முகமது அஷ்மாலி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளமூடாக பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தொடர்பில் அண்மையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி, குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைளுக்காக இணையத்தளத்தினூடாக விற்பனை செய்த பிரதான சந்தேகநபர் கடந்த 9ம் திகதி கைது செய்யப்பட்டார்.
குறித்த பிரதான சந்தேகநபர், கல்கிசையில் வாடகை வீடொன்றில் சிறுமியை தடுத்துவைத்து இணையத்தளத்தில் சிறுமியின் நிழற்படத்தை பதிவேற்றி பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்க அமைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாயாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு உட்பட்ட எவருடனும் உடலுறவு கொள்வது இலங்கை சட்டத்தின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது, இதற்காக அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல் நடந்ததாக வெளியான தகவல்களுக்குப் பின்னர், 1995ம் ஆண்டில் இலங்கை கடுமையான குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
