போலி துறவியை தேடி தீவிர விசாரணை! - பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
மீகாலேவ பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு தப்பிச் சென்ற போலி துறவியை கண்டுப்பிடிக்க பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில்,
“காவி ஆடை அணிந்த குறித்த சந்தேகநபர் அந்த பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார். எனினும், அவரது நடத்தை குறித்து சந்தேகம் அடைந்த விகாரையின் தலைமை பதவியில் இருந்தவர், சநதேகநபரிடம் கேள்வி கேட்க முயன்றுள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் விகாரைக்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு வனப்பகுதிக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து பொது மக்களும், பொலிஸாரும் சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்,
எனினும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், குறித்த நபரை கண்டுப்பிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri