அம்பாறையில் ஏற்பட்ட மோதல் சம்பவம்! சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ள பொலிஸார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பொலிஸ் வீதிசோதனைச் சாவடியில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்களை நீதிமன்றில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளனர்.
இச்சம்பவமானது இன்று (24) அக்கரைப்பற்று நீதிதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 05ம் திகதி இரவு பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில்
ஏற்பட்ட மோதலையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது.
இந்தச்சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் ஊடகவியலாள் ஒருவர் உட்பட 16 பேர் படுகாயமடைந்ததனர்.

இதனையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 05 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் குறித்த 05 பேரை அடையாளம் காட்டும் அணிவகுப்பு இன்று நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது 05 பேரையும் பொலிஸார் அடையாளம் காட்டியுள்ளதாக
அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 23 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam