பொலிஸார் மீது வெடிகுண்டு வீசிய நபர் - துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்
காலி அக்மீமன பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு, நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான இருவரைச் சோதனையிட முயன்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான இருவரைச் சோதனையிடச் சென்ற போது அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
மற்றொரு நபர் பொலிஸ் அதிகாரிகள் மீது வெடிகுண்டு வீச முயன்றார். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்து சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பியோடிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து 105 T-56 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |