யாழில் காலணியுடன் கோவிலுக்குள் சென்ற பொலிஸ் அதிகாரி! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பொலிஸ் உயர் அதிகாரி பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆலயத்திற்குள் காலணியுடன் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“குறித்த பொலிஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்தார். தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள்.
பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருக்கும் போது மேல் சட்டையை கழற்ற கூடாது.
எனினும், நல்லூர் ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றிவிட்டே செல்கின்றனர். இது இந்து மதத்திற்கு பொலிஸார் வழங்கும் கெளரவம் என என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி.......
யாழ் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் செயல்


உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri