இலங்கையில் குழந்தையை காப்பாற்றிய இளைஞனுக்கு விருது வழங்கும் பொலிஸ்
கடந்த வாரம் கித்துல்கல பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ருவன் சஜித் என்ற இளைஞருக்கு விருது வழங்க பொலிஸ் மா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கித்துல்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுலா சென்ற தம்பதி
நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
தாயும் தந்தையும் 6 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையுடன் ஒரு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.
இதன் போது தாயின் மடியில் இருந்த ஒரு மாத குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தது.
குழந்தையை காப்பாற்றிய இளைஞன்
எவ்வாறாயினும், வீதியில் பயணித்த வேன் ஒன்றின் சாரதி, குறித்த குழந்தையை காப்பாற்றிய கித்துல்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த இளைஞனுக்கு விருது வழங்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.