உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கம்பஹாவில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கம்பஹா - பியகம ரணவிரு பகுதிக்கு அருகில் நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பியகம பொலிஸார் அவ்வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு உத்தரவித்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரின் உத்தரவையும் மீறி முச்சக்கரவண்டி முன்னோக்கிச் சென்றதால், பொலிஸார் முச்சக்கரவண்டியின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் இரண்டு சக்கரங்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுடப்பட்ட முச்சக்கரவண்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 53 நிமிடங்கள் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan