வவுனியாவில் மரக்கடத்தல் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: பல இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு
வவுனியா(Vavuniya) - ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுளள்ளதுடன் பல இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில் நேற்று இரவு (23.06.2024) விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம்
இதன்போது, மரங்களை ஏற்றி வந்த பிக்கப் ரக வாகனம் பொலிஸாரை மோதித் தள்ளும் வகையில் செயற்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் குறித்த வாகனத்தை நோக்கி 5 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் வாகனத்தை கைவிட்டு மரங்களை கடத்திச் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதன்பின்னர், வாகனத்தை கைப்பற்றிய பொலிஸார் அதில் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.

மேலும், இந்த மரக்கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் தப்பி ஓடிய சந்தேக நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam