துசித மீதான துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விளக்கம்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவ மீதான துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றைய தினம் இரவு நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரிமண்டல வீதியில் இட்மபெற்றிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்கள் தம்மைத் தாக்கியதாகக் கூறி வாகனத்தில் இருந்த துசிதவும் மற்றுமொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்கள்,ஜீப் வண்டியை வழி மறித்து வாகனத்தை திறக்கச் சொல்லி உள்ளே இருந்தவர்களை தாக்கியதாகவும் ஆவணமொன்றை எடுத்துச் சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
துசிதவின் கையில் இருந்த ஆவணமே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
