பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகம்
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீல் முததிரையை உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து, கட்டிடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுவந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் இருந்த முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
அதன் பிரகாரம் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு சீல் வைத்து மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் விசாரணை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் உள்நுழைந்துள்ளனர்.
அப்பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்காக மேலதிக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |