வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் காணொளி
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று தற்போது, வெளியாகி உள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
“இரவு வேளையில் குறித்த உத்தியோகத்தர் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம் முன்பாக மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
ஒருமையில் பேசிய பொலிஸ் உத்தியோகத்தர்
இதன் போது குறித்த பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் அவரிடம் சென்று வீதியில் மது அருந்த கூடாது என்பது தெரியாதா..? என்று கேட்க, அவரை ஒருமையில் பேசியுள்ளதுடன் தான் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பகுதிக்கு வந்த மேலும் ஒருவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஒருமையில் பதில் வழங்கியுள்ளார்.
இதன்போது, மற்றைய நபரும், மது போதையில் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொது இடத்தில் இருந்து மது அருந்தியமை தொடர்பில் 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த போதும், பொலிஸார் குறித்த முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 27 நிமிடங்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
