மட்டக்களப்பில் வீதிகளில் நடமாடியவர்களை வீட்டிற்கு திருப்பியனுப்பிய பொலிஸார்
விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளிலும் சந்திகளிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருவதுடன், வீதிகளில் தேவையின்றி நடமாடியவர்களை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்ததையடுத்து நேற்று இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை வரையிலால் தனிமைப்படுத்தல் ஊடரங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் உள்நுழையும் இடங்களான கல்லடி பாலம், ஊறணி சந்தி, புதூர் சந்தி போன்ற பகுதிகளில் பொலிஸார் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் நகருக்குள் உள் நுழைவோர், வெளியேறுபவர்களைச் சோதனையிட்டு தேவையின்றி வீதிகளில் பிரயாணித்தவர்களை வீடுகளுக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதேவேளை விசேட அதிரடிப்படையினர் நகர்ப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
