கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் முறியடிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனங்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (26.07.2025) கல்லாறு பகுதியில் இடம்பெற்றள்ளது.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேக்கு மர குற்றிகள்
அத்துடன் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட பெறுமதி மிக்க தேக்கு மர குற்றிகள் இருந்த கப்ரக வாகனத்தை தர்மபுர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார், சந்தேகநபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



