மன்னாரில் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
மன்னாரைச் சேர்ந்த ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில்
கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வு துறை யினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் - மூர்வீதி புதிய தெரு பகுதியை சேர்ந்த லோரன்ஸ் போல் கிளிண்டன் மார்க் (வயது 28) என்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.
ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது
குறித்த நபர் நேற்றைய தினம் புதன்கிழமை (16.08.2023) மாலை மன்னார் பெரிய கடை பகுதியில் உள்ள மது விற்பனை நிலைய பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடமையில் இருந்து 100 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த நபரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |