1408 ரூபா களவாடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது
நன்கொடை உண்டியலை உடைத்து அதில் இருந்த 1408 ரூபா பணத்தை களவாடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மொரட்டுவ - ரத்தாவத்த பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது.
ராஜதந்திர பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்கொடை உண்டியலை உடைத்து பணம் களவாடிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பல்பொருள் அங்காடியின் பணியாளர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிரேஸ்ட பிரஜைகளின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நன்கொடை உண்டியலிலிருந்து குறித்த நபர் பணத்தை களவாடியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam