முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைமையகத்தில் திடீர் தேடுதலில் ஈடுபட்ட பொலிஸார்
முன்னிலை சோசலிசக்கட்சியின் தலைமையகத்தில் பொலிஸார் இன்று திடீர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
நுகேகொடை பிரதேசத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு இன்று முற்பகல் பொலிஸார் வந்து அங்கு சோதனைகளை மேற்கொண்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதியை தேடுதவது போல் தேடுதல் நடத்திய பொலிஸார்
நீதிமன்றத்தினால், வழங்கப்பட்ட எவ்வித தேடுதல் ஆணையும் இன்றி வந்த பொலிஸார், பயங்கரவாதி ஒருவரை தேடுவது போல், கட்சியின் அலுவலகம் முழுவதும் தேடுதல் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய தினங்களில் சில முறை பொலிஸார் முன்னிலை சோசலிசக்கட்சியின் அலுவலகத்தில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர்.
முன்னிலை சோசலிசக்கட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் முன்நின்று செயற்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற போராட்டங்களில் மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களே அதிகளவில் கலந்துக்கொண்டனர். மாணவர் ஒன்றியம், காலிமுகத்திடல் போராட்டகாரர்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.