சட்ட விரோத தொழிலாளருக்கு பொலிஸார் உடந்தை : முல்லைத்தீவில் போராட்டம் (Video)
முல்லைத்தீவு- குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீன்பிடி தொழிலாளர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் ஹிச்சிராபுரம் மீன்பிடி தொழிலாளர்களால் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீன்பிடி தொழிலாளர்களை விடுவிக்க கோரி குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (07.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையின மக்களுடன் முரண்பாடு
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் கஜபாகுபுர , சம்பத்நுவர, ஜனகபுர, கலியாணபுர பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடந்த (05.08.2023)மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதை தொடர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் கடற்றொழிலாளிகள், அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில். பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபும், குமுழமுனை தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பொதுமக்கள், மீன்பிடி தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கடற்றொழிலாளர் சமூகத்தின் பிரச்சினைகள்
போராட்டத்தின் பின்னர் தமிழ் பேசும் மீன்பிடி தொழிலாளர்கள் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்
அடங்கிய மகஜர் வாசித்து காட்டியதன் பின்னர் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம்
மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்க அதிபர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி பிரச்சினையை கதைத்ததன் பின்னர் நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சி செய்வதாகவும், கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் பொலிஸாரிடம் ஒப்படைத்தவர்கள் தப்பி சென்றது எப்படி?, உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் , தமிழ் தேசத்தில் தமிழருக்கு உரிமை இல்லையா?, எமது வாழ்வாதாரத்தில் கை வைக்காதே, சட்ட பூர்வ தொழிலாளர்களை கைது செய்தது எவ்வாறு, நிறுத்து , நிறுத்து பெரும்பான்மையினரின் அத்து மீறலை நிறுத்து, சட்டத்தை மீறி தொழில் செய்வோரை தண்டிக்க யாரும் இல்லையா? அரச அதிகாரிகளே, தமிழ் பேசும் கடற்றொழிலாளிகளின் உடமைகளை நாசமாக்காதே, சட்ட விரோத தொழிலாளருக்கு பொலிஸார் உடந்தையா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பாதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
