இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : பதிவான முறைப்பாடு
இந்திய (India) கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு கடற்றொழிலாளர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பிலேயே அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
குறித்த முறைபாட்டினை அனலை தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர் அனலைதீவு கடற்றொழிலாளர்கள் சார்பில் மேற்கோண்டனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |