பொது மக்கள் முறைப்பாடுகளை புறந்தள்ளும் பொலிஸ் ஆணைக்குழு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் 85 வீதம் விசாரிக்கப்படவில்லை என காணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
5935 பொது முறைப்பாடுகள்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு 5935 பொதுப் முறைப்பாடுகள் பெற்றுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு (2024) இறுதிக்குள், அவற்றில் 4902 அதாவது 82 சதவீதம் விசாரிக்கப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு பொலிஸ் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தால் பெறப்பட்ட பொது முறைப்பாடுகள் எதுவும் விசாரிக்கப்படவில்லை.
பொது மக்கள் முறைப்பாடுகளை விசாரணையை உகந்த நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் பரிந்துரைத்தது.
பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தவை
பொதுமக்கள் முறைப்பாடுகள் தொடர்பான தரப்பினரால் கோரப்பட்ட மேலதிக தகவல்களை தெளிவாகவும் துல்லியமாகவும் சமர்ப்பிக்கத் தவறியது மற்றும் பொலிஸ் விசாரணை அறிக்கைகளை சரியான நேரத்தில் பெறத் தவறியது.
மற்றும் முறைப்பாடுகள் புலனாய்வுப் பிரிவின் பிரதி இயக்குநர் பதவி வெற்றிடம் ஆகியன விசாரணையை முடிவுறுத்த முடியாமைக்கான காரணம் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri