14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது! - குற்றப் பார்வை (Video)
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக ஹாலிஎல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது , வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாதம் கர்பிணியாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் பதுளைச் சேர்ந்த 41 வயதுடைய 7 வயது பிள்ளையின் தந்தை எனவும் குறித்த சிறுமியின் தாயின் அனுமதியோடு அவர் சிறுமியுடன் நெருங்கி பழகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் மூன்றாவது சந்தேக நபரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை இதோ,



