பொலிஸ் அதிபர்-ஆணையக மோதல்: மீண்டும் ஆரம்பம்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் (OIC) இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தேசிய பொலிஸ் ஆணையகம் சட்ட மா அதிபருடன் ஒரு சந்திப்பை கோரியுள்ளது.
இந்த சந்திப்பு, எதிர்வரும் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் ஆணையகம்
நிலையப் பொறுப்பதிகாரிகளின் நியமனத்தைக் கையாளும் அதிகாரம் தனக்கு இருப்பதாக, பதில் பொலிஸ் மா அதிபர்- பிரியந்த வீரசூரிய, சட்ட மா அதிபர் தரப்பில் இருந்து, விளக்கம் பெற்றதை அடுத்தே, பொலிஸ் ஆணையகம் இந்தக் கூட்டத்தை நடத்தக் கோரியுள்ளது.
பொறுப்பதிகாரிகளின் நியமனங்களைச் செய்ய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பது மிகவும் தெளிவாக உள்ளது எனினும், ஆணையகத்துக்கு தெரிவிக்காமல், பொலிஸ் அதிபர், சட்ட மா அதிபரின் கருத்தைக் கோரியமை தொடர்பிலேயே, சட்ட மா அதிபருடன் விவாதிக்க விரும்புவதாக,பொலிஸ் ஆணையகம் குறிப்பிடுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri
