மட்டக்களப்பு நோக்கிய மாபெரும் பேரணியை குழப்புவதற்கு புலனாய்வாளர்கள் முயற்சி: வாக்குவாதத்தில் இளைஞர்கள் (Video)
யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பிக்ப்பட்ட பேரணியை குழப்புவதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கை 75ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் பேரணி இடம்பெற்ற வருகின்றது.
இன்றைய தினம் (05.02.2023) இரண்டாம் நாள் பேரணியில், கிளிநொச்சி பரந்தன் சந்தியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி பரந்தன் வீதி வழியாக முல்லைத்தீவை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த நிலையில், பேரணியில் இனம் தெரியாதவர்கள் சிவில் உடையில் உள்நுழைந்து பேரணியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் இனம் தெரியாத நபருகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பேரணியை முன்னோக்கி செல்லவிடாது இடைமறித்து பொலிஸாரும் குழப்பத்தை விளைவித்துள்ளனர்.
குறித்த பேரணியில் பல்கலைக்கழக மாணவர்களுடன், மத குருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகக்து.













