மன்னாரில் பொலிஸார் மீது 17 வயது இளைஞன் கொலைவெறித் தாக்குதல்
குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, மன்னார், கரிசல் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார்நிலையில் இருந்த நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர், மன்னார், கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள்
இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கூரிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனையடுத்து, 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
குறித்த சந்தர்ப்பத்தில் 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா



