முத்துநகர் விவசாயிகள் மீதான பொலிஸாரின் தாக்குதல் : கண்டிக்கும் இம்ரான் எம்.பி
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (29) நடைபெற்றபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு
முன்னதாக, முத்துநகர் காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொண்ட அமைதி போராட்டத்தில் அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தாம் ஆட்சிக்கு வந்தவுடன் முத்துநகர் காணிப்பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என கூறிய இந்த அரசாங்கம் தற்போது அந்த விவசாயிகளை எதிர்கொள்ள முடியாமல் பொலிஸாரை கொண்டு அவர்களை விரட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam