எரிபொருள் நிலையத்தில் மதகுரு மீது பொலிஸ் தாக்குதல்: மக்கள் போராட்டம் (Video)
வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுரு ஒருவரை பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்ற போது பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் மதகுரு ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் போராட்டம்
இதனையடுத்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலை காணப்பட்டதாகவும், நீண்ட நேரமாக வவுனியா, மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதற்கு இனங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.